Monday, 7 November 2016

பேடியின்மை



"ஒரு பரப்பத்து"

நடத்துனரிடம் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டான். கொளத்து பஸ் ஸ்டாண்டுல எடுத்த பஸ்சு, ஆனா இராமன்புதூர் வந்த பெறவு தான் டிக்கெட்டு எடுக்க முடிஞ்சது. இண்ணகு உள்ள கடைசி பஸ்ஸா இருந்தாலும், நல்ல கூட்டம். டிக்கெற்று எடுக்க இத்துர தேரம் ஆயிருகணா பாருங்க. 5D பஸ்சு எண்ணகும் இப்டி இருக்காது. இண்ணகு என்னோ நல்ல கூட்டம்.

இதை யொசித்துக் கொண்டிருக்கும்போதே டெலிபோன் பூத்துல அம்மவுடன் பேசியது ஞாபகம் வந்தது,

மோன, வெள வழியா வராத! IRE வழியா வா என்னா!. பேபட்டி கெடக்கும்.”,

சரி ஏ, நாங் வச்சுதேன் பஸ்சு இப்பம் எடுக்குவான்”,

மோன நிமலு, IRE வழியா வா செல்ல மோன”, தொலைப்பேசியை துண்டித்தான்.

இராஜாக்கமங்கலம் வந்தியாச்சு, கட எல்லம் அடச்சு கெடே! வேற பின்ன, மணி பதினொண்ணு ஆவ போறே!

கிறிஸ்துவின் பஞ்ச் வசனங்கள்


பெரியவிளை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் (நமக்கு தான் ஊரு முச்சூடும் சொந்தந்தானே, அதனால பெரியவிளை மக்கள் எல்லாரையும் பொதுவா சொந்தங்கள்ணு சொல்லலாம், தப்பில்ல!) தவக்காலத்தில், சுட்டெரிக்கும் கோடை நாளின் இரவில், தண்ணொளி வீசும் முழுநிலவின் கீழ் அமர்ந்து எழுதுகிறேன்.

திருச்சபை நமக்கு வழங்கிய ஆறு காலப்பிரிவுகளாகிய:
  1. திருவருகைக் காலம்
  2. கிறிஸ்து பிறப்பு காலம்
  3. பொதுக்காலம்-1
  4. தவக்காலம்
  5. உயிர்ப்பு காலம் (மற்றும்)
  6. பொதுக்காலம்-2


ஆகியவற்றுள் என் மனதுக்கு நெருக்கமானதாக நான் உணர்வது தவக்காலம் தான். அதற்கு காரணம் அதன் வழிபாட்டு முறைகளும், நெஞ்சையுருக்கும் பாடல்களும் தான் என நிதர்சனமாக சொல்லலாம். அதிலும் குறிப்பாக குருத்து ஞாயிறன்றும், பெரிய வெள்ளியன்றும் வாசிக்கப்படும் நற்செய்தி வாசகம் எனக்கு மிகவும் விருப்பமானது.

அந்த வாசகத்தில் இயேசு பேசும் சில வசனங்கள் பஞ்ச் வசனங்களாக (Punch Dialogues அல்லது முத்திரை வசனங்கள்) எனக்கு தோன்றுகிறது. திரு.ரஜினிகாந்தின் திரைப்படங்களை பார்த்து வளர்ந்த எனக்கு, பஞ்ச் வசனங்களை அடையாளம் கண்டுகொள்வது கடினமா என்ன?

Wednesday, 27 April 2016

விண்வெளி-2 (சார்புத்தன்மை) - இரண்டு

        அனைத்தும் சார்புடையது (Everything is Relative). பூமியில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுமே மற்றொன்றை சார்ந்து தான் நிகழ்கிறது. தன்னிச்சையாக ஏதும் இதுவரை நிகழ்ந்ததாக தெரியவில்லை. தெளிவாக சொல்லவேண்டும் என்றால், ஒவ்வொரு நிகழ்வின் மதிப்பையும், அளவையும், வீரியத்தையும் கணக்கிட அதே போன்ற வேறொரு நிகழ்வு தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, விஷத்தி வீரியத்தை அளவிட வேண்டுமானால், அதை வேறு ஒரு விஷத்தின் தன்மையை கொண்டு ஒப்பிட்ட வேண்டும். விரிவாக பார்த்தோமானால், விஷத்தின் உயிர் பறிக்கும் தன்மையை பொறுத்தே:

  • சிறு விஷம் (slow poison) 
  • நஞ்சு 
  • கொடு விஷம் (கொடிய விஷம்) என பிரிக்கலாம். 

Tuesday, 26 April 2016

விண்வெளி - 2 (சார்புத்தன்மை/Relativity)

        அன்பு மாணாக்கரே, இந்த விண்வெளி அத்யாயத்தில், சார்புத்தன்மை (Relativity) குறித்து நாம் பார்க்கவிருக்கிறோம். சார்புத்தன்மை கோட்பாடு, பிரபஞ்சம் முழுதும் பயன்படும் ஒன்றாகும்.

சார்புத்தன்மை என்றால் என்ன?

        அதைப்பற்றி தெரிந்துகொள்ள, நாம்மை சுற்றி நிகழ்பவற்றை நாம் கூர்ந்து கவனித்தால் போதுமானது. எடுத்துக்காட்டாக, குழந்தை ஒன்று ஓடி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். குழந்தைகள் ஓடுவது வேகமாகவா, மெதுவாகவா? அனைவரும் மெதுவாக என்று தான் சொல்வோம். அதுதான் இயல்பு. மெதுவாக என்று நாம் சொல்ல காரணம், குழந்தைகளின் வேகத்தை நாம் மனதில், ஓர் சராசரி மனிதன் ஓடும் வேகத்துடன் ஒப்பிட்டது தான்.