அனைத்தும் சார்புடையது (Everything is Relative). பூமியில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுமே மற்றொன்றை சார்ந்து தான் நிகழ்கிறது. தன்னிச்சையாக ஏதும் இதுவரை நிகழ்ந்ததாக தெரியவில்லை. தெளிவாக சொல்லவேண்டும் என்றால், ஒவ்வொரு நிகழ்வின் மதிப்பையும், அளவையும், வீரியத்தையும் கணக்கிட அதே போன்ற வேறொரு நிகழ்வு தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, விஷத்தி வீரியத்தை அளவிட வேண்டுமானால், அதை வேறு ஒரு விஷத்தின் தன்மையை கொண்டு ஒப்பிட்ட வேண்டும். விரிவாக பார்த்தோமானால், விஷத்தின் உயிர் பறிக்கும் தன்மையை பொறுத்தே:
அது மட்டுமல்லாமல் நாமும் நம்மை பலரோடு ஒப்பிட்டு பார்க்கிறோம். இது போல மனிதனின் குணநலன்களிலிருந்து கரும்பின் சுவை வரை அனைத்தையும் அளப்பதற்கு அதே போன்ற வேறொரு பொருள் வேண்டும்.
அவ்வாறே, உலகில் மட்டும் அல்லாமல், விண்வெளியிலும் ஒரு விளைவு மற்றொன்றை சார்ந்து தான் இருக்கிறது. இதைத்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Theory of Relativity அல்லது சார்பு கோட்பாடு என கூறினார். இந்த Theory of Relativity-ல் இரன்டு பிரிவுகள் உள்ளன.
இந்த இரண்டு கோட்பாடுகள், புவி மற்றும் விண்வெளியில் உள்ள அனைத்து நிகழ்வுகளும், ஏன் அவ்வாறு நிகழ்கின்றன என விளக்க வல்லது.
எடுத்துக்காட்டாக,
- சிறு விஷம் (slow poison)
- நஞ்சு
- கொடு விஷம் (கொடிய விஷம்) என பிரிக்கலாம்.
அது மட்டுமல்லாமல் நாமும் நம்மை பலரோடு ஒப்பிட்டு பார்க்கிறோம். இது போல மனிதனின் குணநலன்களிலிருந்து கரும்பின் சுவை வரை அனைத்தையும் அளப்பதற்கு அதே போன்ற வேறொரு பொருள் வேண்டும்.
அவ்வாறே, உலகில் மட்டும் அல்லாமல், விண்வெளியிலும் ஒரு விளைவு மற்றொன்றை சார்ந்து தான் இருக்கிறது. இதைத்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Theory of Relativity அல்லது சார்பு கோட்பாடு என கூறினார். இந்த Theory of Relativity-ல் இரன்டு பிரிவுகள் உள்ளன.
- சிறப்பு சார்பு கோட்பாடு (Theory of Special Relativity)
- பொது சார்பு கோட்பாடு (Theory of General Relativity)
இந்த இரண்டு கோட்பாடுகள், புவி மற்றும் விண்வெளியில் உள்ள அனைத்து நிகழ்வுகளும், ஏன் அவ்வாறு நிகழ்கின்றன என விளக்க வல்லது.
எடுத்துக்காட்டாக,
- பெருவெடிப்பு (Big Bang) எவ்வாறு நிகழ்ந்தது?
- நட்சத்திரங்கள் தோன்ற காரணம் என்ன?
- அவை எத்தனை காலம் எரிந்து கொண்டிருக்கும்?
- நட்சத்திரங்களின் அழிவு எப்படி இருக்கும்?
- கருங்குழிகள் (Black Holes) எவ்வாறு உருவாகின்றன?
இவ்வாறு பல கேள்விகளுக்கு இந்த இரண்டு கோட்பாடுகளால் பதில் கூற முடியும்.
ஆனால், இந்த கோட்பாடுகளால் கண்ணுக்கு தெரியும் பொருட்களின் செயல்பாடுகளை மட்டுமே கணிக்க முடியும். நம் கண்களுக்கு கூட தெரியாத, அணுக்கள் மற்றும் அணுவடித்துகள்கள் (அணுவின் உள் இருக்கும் சிறு துகள்கள் subatomic particles) போன்றவற்றின் இயக்கத்தை விளக்க வேறு கோட்பாடு தேவைப்படுகிறது. அது குவாண்டம் இயங்கியல் (Quantum Mechanics).
சிறப்பு சார்பு கோட்பாடு (Theory of Special Relativity)
சிறப்பு சார்பு கோட்பாடால், மிக வேகமாக நகர்வனவற்றின், இயக்கங்களை தெளிவாக வரையறுக்க முடியும்.பொது சார்பு கோட்பாடு (Theory of General Relativity)
பொது சார்பு கோட்பாடு, விண்வெளியில் ஈர்ப்பு விசையின் தாக்கங்கள் குறித்த தெளிவன உத்தரங்களை நல்கும். முன்னர் கூறிய சிறப்பு சார்பு கோட்பாட்டல், கோள்கள் மீதான ஈர்ப்பு விசையின் தாக்கங்களை விளக்க முடியாது. 20-ம் நூற்றாண்டு அறிவியலில், இந்த இரண்டு கோட்பாடுகளின் பங்களிப்பு அளப்பரியது. அதற்கு ஐன்ஸ்டைனுக்கு தான் நாம் நன்றி கூற வேண்டும்.ஆனால், இந்த கோட்பாடுகளால் கண்ணுக்கு தெரியும் பொருட்களின் செயல்பாடுகளை மட்டுமே கணிக்க முடியும். நம் கண்களுக்கு கூட தெரியாத, அணுக்கள் மற்றும் அணுவடித்துகள்கள் (அணுவின் உள் இருக்கும் சிறு துகள்கள் subatomic particles) போன்றவற்றின் இயக்கத்தை விளக்க வேறு கோட்பாடு தேவைப்படுகிறது. அது குவாண்டம் இயங்கியல் (Quantum Mechanics).
No comments:
Post a Comment