Saturday, 3 May 2014

வடக்குநாதன் திருக்கோவில், திருச்சூர்

இது திருச்சூர் நகரில் உள்ள நன்கு அறியப்பெற்ற திருக்கோவில். உலகப் புகழ் திருச்சூர் பூரம் திருவிழா இங்கு தான் நடைபெறுகிறது. சென்ற ஏப்ரல் (2014) மாதம் 27ம் நாள் அங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு நான் கண்ட காட்சிகளை படமாக உங்களுக்கு பகிர்கிறேன்.

வடக்குநாதன் திருக்கோவில் வாயிற் பாதை

அன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட, வெயில் மிக அதிகமாக இருந்ததால் கோவிலில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்த்து.




திருக்கோவில் வாயில்

செம்மண் ஓட்டுக் கூரையால் அமைக்கப்பட்டுள்ள திருக்கோவில் வாயிலின் மேல் புறத்தில், 'ஓம் நம: சிவாய' (ഓം നമ: ശിവായ) என மலயாளத்தில் எழுதப்பட்டிருப்பதை காணலாம்.



11 அடுக்கு குத்து விளக்கு

கோவில் வாயிலின் முன்பாக, ஓர் ஆமை, ஏறதாழ 35 அடி உயரம் கொண்ட, 11 அடுக்கு குத்து விளக்கை சுமப்பது போன்ற உருவம் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கு என்ன பொருள் என்பது குருக்கள் உட்பட அங்கு உள்ள எவருக்கும் தெரியாதது வருந்தத்தக்கதே.





உட்புற சிற்றாலயங்கள்

கோவில் உட்புறத்தில் ஆதி சங்கரர், விநாயகர், கிருஷ்ணர், கிராத மூர்த்தி (சிவன்), மேலும் சிலருக்கு அழகான சிறு ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன.










வேட்டைக்காரன் கிராத மூர்த்தி ஆலயம்



அர்சுனன் வில்லுக்குழி

மகாபாரதத்தில் வரும் அர்சுனன், தன் வில்லிலிருந்து எய்த அம்பு ஒன்று இங்கு விழுந்ததாகவும், அது விழுந்த இடத்தில் நீர் பெருக்கெடுததாகவும் கூறுகின்றனர். அந்த அம்பு விழுந்த இடத்தை தான் 'அர்சுனன் வில்லுக்குழி' என சொல்கின்றனர். இன்றளவும் அதில் நீர் பெருகியிருப்பதை நாம் காணலாம்.





தியானத் தரைகள்

தெய்வங்களும், மகான்களும் தியானம் செய்ததாக கூறப்படும் தரைகளும் ஆங்காங்கே காணப்பட்டன.

பகவான் (சிவன்) தியானத்தில் இருந்த தரை




பாகனார் தரை

மலயாள பழங்கதை கதாபாத்திரங்களுள் ஒருவரான பாகனார், இந்த தரையில் அமர்ந்து தியானம் செய்ததாக கூறப்படுகிறது. பாகனார் யார் என்பதும் குருக்கள் உட்பட அங்குள்ள எவருக்கும் தெரியாதது வியப்பாக இருந்தது.



சந்தன கோபாலகிருஷ்ணன் தரை

இது கிருஷ்ணர் தியானம் செய்த தரை


மிருத சஞ்சீவனி தரை

இது குறித்து அதிகமாக தகவல்கள் கிடைக்கவில்லை. சஞ்சீவனி என்பதற்கு முடிவில்லா வாழ்வு என்பது பொருள்



கமண்டல மரம்

கோவில் சுற்றுப்புறத்தில் அமைந்திருந்த கமண்டல மரம்



ஸ்ரீ பரசுராமர்




சிதம்பரம், இராமேஸ்வரம்

(வடக்கு கிழக்கு சிதம்பரநாதன், தெற்கு கிழக்கு இராமேஸ்வரநாதன்)


தெற்கு ஊரகத்தம்மா திருவடி
தெற்கு மேற்கு கூடன்மாணிக்கம் ஸங்கமேஷ்வரன்




வியாஸ சிலை

'ஹரி: ஸ்ரீ கணபதியே நம' என் பலர் அதில் எழுதி செல்வதை காணலாம்




பூரம் திருவிழா விரைவில் நடக்கவிருப்பதை ஒட்டி, கண்காட்சி நடை பெற்றது


No comments:

Post a Comment