Tuesday, 12 November 2013

சோழர் குல குந்தவை போல் - உடன் பிறப்பு - பாடல், வரிகள்

பாடல்: சோழர் குல குந்தவை போல்
படம்: உடன் பிறப்பு
இசை: இளையராஜா
வரிகள்: கவிஞர் வாலி

சோழர் குல குந்தவை போல், சொர்ணக்கிளி நான் தரவா?
சேரர் இளம் தேவியை போல், சித்திரத்தை நான் தரவா?
மன்னவன் மாமல்லன் மாடத்து பைங்கிளி, கொண்டு வந்து நான் தரவா?
நண்பா அன்பாய் மாலை சூடிக்கொள்ள;

சோழர் குல குந்தவை போல், சொர்ணக்கிளி நான் தரவா?
சேரர் இளம் தேவியை போல், சித்திரத்தை நான் தரவா?


ஆ..ஆ

தாரம்தான் வந்த பின்னும், தாயை போல் நான் உனை; ம்...ம்
கைகளில் வைத்திருப்பேன், நண்பன்தான் உன் துணை. ம்..ம்
இன்பத்தினை பங்கு வைக்க, அன்புக் குயில் அங்கிருப்பாள்;
துன்பங்களில் பங்கு கொள்ள, உன் அருகில் நான் இருப்பேன்.
பாசத்தில் உன் துணை, என்னை கட்டி போட்ட தென்பேன்;
ஈருடலில் ஓர் உயிர்தான், நீயும் நானும் மேலும் என்ன சொல்ல?


உனகையை சிந்துகின்ற, மேனகையை நான் தரவா?
வானகத்து தேவதையாம், ஊர்வசியை நான் தரவா?

ஆ..ஆ

நேற்று நாம் வீதியிலே, இன்று நாம் வேலையில். ம்..ம்
நாளை ஓர் வேளை வந்தால், நாமும் மண மாலையில். ம்..ம்
வண்ணங்கள் மாறிப் போக, நாமும் இங்கு பூக்கள் அல்ல.
எண்ணங்கள் மாறிப் போக, சிந்திக்கின்ற ஆட்கள் அல்ல.
ஏழை நான் என்றும் உன், வீட்டுக்கொரு காவல் போலே.
ஈருடலில் ஓர் உயிர்தான், நீயும் நானும் மேலும் என்ன சொல்ல?


உனகையை சிந்துகின்ற, மேனகையை நான் தரவா?
வானகத்து தேவதையாம், ஊர்வசியை நான் தரவா?

மன்னவன் பாரியின் அங்கவை, செங்கவை போல ஒரு பெண் தரவா?
நண்பா அன்பாய் மாலை சூடிக்கொள்ள;

சோழர் குல குந்தவை போல், சொர்ணக்கிளி நான் தரவா?

வானகத்து தேவதையாம், ஊர்வசியை நான் தரவா?

No comments:

Post a Comment