Wednesday, 17 July 2013

Gmail ல் 2-அடுக்கு சரிபார்த்தலை (2 step verification) செயல்படுத்துவது எப்படி??

பின்வரும் எளிய 10 செயல்களை பின்பற்றினால், Gmail ல் 2-அடுக்கு சரிபார்த்தலை (2 step verification)  செயல்படுத்தலாம்.

1. Gmail-ல் நுழைந்து, Settings ஐ தேர்வுசெய்யவும்





2. அடுத்ததாக 'Accounts' ஐ கிளிக் செய்யவும்



3. பின்னர் 'Other Google Account settings' ஐ தேர்வு செய்யவும்



4. புதிதாக தோன்றும் பக்கத்தில் 'Security' ஐ கிளிக் செய்யவும்



5. பின்பு '2-step verification' ல் 'Edit' ஐ கிளிக் செய்யவும்



6. இப்போது புதிய பக்கத்தில் 'Start set up >>" ஐ கிளிக் செய்யவும்



7. இனி உங்கள் கைப்பேசி எண்ணை பதிவு செய்து, 'Send code' ஐ அழுத்தவும்



8. இப்போது உங்கள் கைப்பேசிக்கு ஒரு SMS வரும், அதில் உள்ள் 'Verification code' ஐ தோன்றும் பக்கத்தில் பதிவு செய்து, 'Verify' ஐ அழுத்தவும்







9. 'Trust this Computer' தேர்வை நீக்கினால் நல்லது





10. இறுதியாக 2 அடுக்கு சரிபார்த்தலை உறுதி செய்யவும்..


அவ்வளவு தான் பின் வரும் பக்கம் தோன்றும்...



இனி Gmail- ஐ logout செய்து, login செய்தால், username மற்றும் password கொடுத்த பிறகு, ஒரு SMS வரும். அதில் உள்ள verification code ஐ பதிவு செய்து இனி Gmail ஐ பாதுகாப்பாக பயன் படுத்தலாம்.

எச்சரிக்கை: கைப்பேசியை தொலைத்து விடாதீர்கள்!!



No comments:

Post a Comment