யாவர்க்கும் சினம் கொள்ளுதல் மிக எளிதாம்! இது ஒரு பெரும் பிரச்சனையாகவும் சிலர்க்கு அது சாபமாகவும் உள்ளது. திருக்குறளில் வெகுளாம என்றொரு முழு அதிகாரமே இருக்கிறது.
சினம் தோன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும், எனக்கு காரணமில்லாமல் கூட சிலரை முதல் முறை கண்டால் சினம் தோன்றியிருக்கிறது. அது தவறு எனக்கும் தெரியும். அதை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்கிறேன்.
இந்த தருணத்தில் என் மனதின் நிலையை எடுத்துரைக்கவே, இந்த செய்யுள்:
பச்சிளம் பிள்ளை போல் வருவார்,
பாவமொரு பேதை போல் சிரிப்பார்,
சிரியின் அரவம் கேட்டால் சினமேறும்,
சிறிதும் முன்பெனக் கறியாதா ராவாரேயவர்!
அவர் முகங் கண்டேன் சினப்பானேன்?
அவர் அரவங் கேட்டேன் உளஞ்சீறுவானேன்?
செங்குருதி கொதிக்க வெகுளுவதே னென்மனம்?
செவ்வனே தீதொன்றும் செய்திராரே யவர்!
எவர்கண்ணும் கனிகண் நோக்கென் மனமே!
தேனமுதாராம் அகத்துசில திண்கல் தோற்றத்தாரே!
தீதும் நன்றும் பழகித் தெளிவாயன்றி,
நோக்கித் தெளிதற் கவர்புன லல்லவே!
No comments:
Post a Comment