புளியுமொளவு என்பது, தென்தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் உள்ள கடற்கரை கிராமங்களிலும், கேரளத்தில் திருவநந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களிலும் (பெரும்பாலும் குமரி மாவட்டத்தில்) எதார்த்த காலை உணவாக கொள்ளப்படுவது. இந்த கிராமங்களில், மீன் தினமும் எல்லா வேளைகளிலும் உணவாக இருப்பதால், மீன் சார்ந்த பலவகையான உணவு வகைகளை இங்கு காணலாம். அவற்றுள் ஒன்று தான் புளியுமொளவு.
பெயர் வர காரணம்!
இந்த உணவில் இடம் பெறக்கூடிய முக்கியமான பொருட்கள் மீன், புளி மற்றும் மிளகு ஆகும். இந்த ஊரகளில் மீன் எல்லா உணவிலும் இடம் பெறும் என்பதால், மீன் என்பது இந்த உணவுப் பெயரில் இடம் பெறவில்லை. மற்ற இரண்டு பொருட்களான புளியையும், மிளகையும் சேர்த்து, புளியும் மிளகும் என்றானது. பின்னர் இதுவே மருவி புளியுமொளவு என திரிந்தது.
எப்படி உண்ண வேண்டும்?
இது காலை வேளை உணவான
பழங்கஞ்சிக்கு (முந்தைய நாள் வடித்த சோற்றை, நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை நீருடன் சேர்த்து உண்ணப்படுவது) கூட்டாக உண்ணப்படும் ருசிகரமான, அதிக காரமும், புளிப்பும் கலந்த உணவு.
No comments:
Post a Comment