வானில் நாம் காணும் விண்மீன்கள் சிறிதாய் தோன்றினாலும், நம் பூமியை விட பல ஆயிரம் மடங்கும், மேலும் சில பல கோடி மடங்கும் பெரியன.
ஒருவருடைய உருவத்தை பார்த்து அவருடைய பெருமையை எடை போடக் கூடது. அதுபோல, சிறியதாய் தோன்றும் விண்மீன்கள், தங்களுக்குள் பல்வேறு அற்புதங்களையும் சிறப்புகளையும் கொண்டுள்ளன.
எனினும் விண்வெளியையும் இதேபோல கடந்து ஆராய்வது என்பது மிக மிக சவாலானது. நம் சூரிய குடும்பத்தில், நமக்கு மிக அருகில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கே 10 மாதங்கள் ஆகிறது. நமக்கு அருகில் உள்ள விண்மீன் சூரியன் தான். அதிலிருந்து ஒளி பூமிக்கு வர 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. அப்படியானால் ஒளியின் வேகத்தில் சென்றால் 8 நிமிடங்களில் சூரியனை அடைந்துவிடலாம். இது சொல்வதற்கு எளிதானாலும், அவ்வளவு சுலபம் அன்று. ஒளியின் வேகம் என்பது நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் (3,00,000 கி.மீ./நொடிக்கு).
இதுவரை மனிதன் உருவாக்கியவற்றில் மிக வேகமாக பயணித்தது, ஹீலியஸ்-2 (Helios2) விண்கலம் தான். அது அதிகபச்சமாக மணிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கி.மீ வேகத்தில் (2,50,000கிமீ/மணிக்கு) 1979ம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று பயணித்தது. மணிக்கு 2.5லட்சம் என்பது நொடிக்கு வெறும் 70.22கி.மீ (70.22கி.மீ/நொடி) தான். ஒளியின் வேகமோ, நொடிக்கு 3லட்சம் கி.மீ (3,00,00கி.மீ/நொடி) ஆகும்.
ஒருவேளை விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும் யாராலும்/எதாலும் ஒளியின் வேகத்தை அடைய முடியாது. அதைவிட வேகமாக செல்ல முற்பட்டால், அதன் எடை அதிகரித்து, வேகம் தானாக குறைந்துவிடும். அது வேறு கதை. அதை பின்னால் காண்போம்.
நம் பூமியில், தொலைவை கணக்கிட கி.மீ-ஐ அளவாக பயன்படுத்துகிறோம். விண்வெளியில் ஒவ்வொன்றுக்குமான இடைவெளி மிக அதிகம் என்பதால் ஒளியாண்டு என்னும் அளவு பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஒளியாண்டு என்பது, ஒளியின் வேகத்தில் (நொடிக்கு 3லட்சம் கிமீ) ஒரு ஆண்டு முழுவதும் பயணம் செய்யும் தூரம்.
இது வாயடைக்க வைக்கும் தூரம். சூரியனுக்கு அடுத்ததாக நமக்கு மிக அருகில் உள்ள விண்மீன், புரோக்சிமா செண்ட்டாரி. இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
ஒருவருடைய உருவத்தை பார்த்து அவருடைய பெருமையை எடை போடக் கூடது. அதுபோல, சிறியதாய் தோன்றும் விண்மீன்கள், தங்களுக்குள் பல்வேறு அற்புதங்களையும் சிறப்புகளையும் கொண்டுள்ளன.
மனிதன் இன்று விண்வெளியை பார்த்து அதிசயிப்பது போல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கடலை பார்த்து மனிதன் அதிசயித்தான். கடலுக்கு அப்பால் என்ன இருக்கிறது என பல நூற்றாண்டுகள் தெரியாமலேயே இருந்தான். பின்னர் கப்பல் கட்டி கடலை கடந்தான். இப்போது, செயற்கைக்கோள் மூலம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்தையும் நாம் கண்டுகொண்டோம்.
Courtesy https://www.nasa.gov |
எனினும் விண்வெளியையும் இதேபோல கடந்து ஆராய்வது என்பது மிக மிக சவாலானது. நம் சூரிய குடும்பத்தில், நமக்கு மிக அருகில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கே 10 மாதங்கள் ஆகிறது. நமக்கு அருகில் உள்ள விண்மீன் சூரியன் தான். அதிலிருந்து ஒளி பூமிக்கு வர 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. அப்படியானால் ஒளியின் வேகத்தில் சென்றால் 8 நிமிடங்களில் சூரியனை அடைந்துவிடலாம். இது சொல்வதற்கு எளிதானாலும், அவ்வளவு சுலபம் அன்று. ஒளியின் வேகம் என்பது நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் (3,00,000 கி.மீ./நொடிக்கு).
இதுவரை மனிதன் உருவாக்கியவற்றில் மிக வேகமாக பயணித்தது, ஹீலியஸ்-2 (Helios2) விண்கலம் தான். அது அதிகபச்சமாக மணிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கி.மீ வேகத்தில் (2,50,000கிமீ/மணிக்கு) 1979ம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று பயணித்தது. மணிக்கு 2.5லட்சம் என்பது நொடிக்கு வெறும் 70.22கி.மீ (70.22கி.மீ/நொடி) தான். ஒளியின் வேகமோ, நொடிக்கு 3லட்சம் கி.மீ (3,00,00கி.மீ/நொடி) ஆகும்.
ஒருவேளை விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும் யாராலும்/எதாலும் ஒளியின் வேகத்தை அடைய முடியாது. அதைவிட வேகமாக செல்ல முற்பட்டால், அதன் எடை அதிகரித்து, வேகம் தானாக குறைந்துவிடும். அது வேறு கதை. அதை பின்னால் காண்போம்.
நம் பூமியில், தொலைவை கணக்கிட கி.மீ-ஐ அளவாக பயன்படுத்துகிறோம். விண்வெளியில் ஒவ்வொன்றுக்குமான இடைவெளி மிக அதிகம் என்பதால் ஒளியாண்டு என்னும் அளவு பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஒளியாண்டு என்பது, ஒளியின் வேகத்தில் (நொடிக்கு 3லட்சம் கிமீ) ஒரு ஆண்டு முழுவதும் பயணம் செய்யும் தூரம்.
1 ஒளியாண்டு = (3,00,000 x 365நாள் x 24மணி x 60நிமிடம் x 60 நொடிகள்) கிமீ
இது வாயடைக்க வைக்கும் தூரம். சூரியனுக்கு அடுத்ததாக நமக்கு மிக அருகில் உள்ள விண்மீன், புரோக்சிமா செண்ட்டாரி. இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.
No comments:
Post a Comment