Monday, 8 April 2013

கட்டிட மரம்

சென்னை வாழ் கட்டிட மரமே,
எம்பைங் காபோல் நிழலீவா யேனும்,
அக்கா போல் உயிர்வாயு வைநீயே,
அளிக்கா துஅழிப்பாய் உன்ஏசி யாலேநீ!



























சென்னையில் உள்ள, மரங்களை போன்று உயர்ந்த கட்டிடமே, எங்கள் ஊர்களில் உள்ள பசுமையான சோலைகளை (கா) போல் உன்னால் நிழல் அளிக்க முடியும்.

ஆனால், அந்த சோலைகள் (கா) வழங்குவதை போன்று உயிர் அளிக்கும் வாயுவை (oxygen) உன்னால் அளிக்க இயலாது.

மாறாக உன்னிடம் உள்ள ஏசிகளை (AC - Air Condition) கொண்டு உயிர் வாயுவை, நீ அழித்துக் கொண்டிருக்கிறாய்!!

No comments:

Post a Comment