Monday 27 July 2015

வட்டார வழக்கு

        வட்டார வழக்கு குறித்து பலருக்கும் பல்வேறு கருத்துகள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலர் வட்டர வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, சிலர் அதை பெருமையாக நினைக்கிறார்கள், சிலர் அது கொச்சையானது என கருதுகிறார்கள்.

        முதலில், நம் குழந்தைகளுக்கு வட்டர வழக்கு பற்றி விளக்கும் கடமையும் நமக்கு
உள்ளது. வட்டார வழக்கு என்பது ஒருகுறிப்பிட்ட இடத்தில் ஒரு மொழி எவ்வாறு பேசப்படுகிறது, அதன் உச்சரிப்பு எப்படி இருக்கிறது என்பதை வைத்தே அமையும். எடுத்துக்காட்டாக, குமரி மாவட்டத்தில் பேசப்படுவது போல தமிழ், சேலம் மற்றும் கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் பேசப்படுவது இல்லை. சென்னையில் வேறு விதமான தமிழ் உச்சரிப்பு உள்ளது. இது போலவே மலையாளமும் திருவனந்தபுரம், கோழிக்கோடு, திருச்சூர், காசர்கோடு போன்ற பகுதிகளில் வெவ்வேறாக உச்சரிக்கப்படுகிறது. ஆங்கிலத்திலும், இந்தியிலும் உலகின் பல்வேறு மொழிகளிலும் இது போலவே பல்வேறு வட்டார வழ்க்குகள் உள்ளன.