Thursday, 23 March 2017

பேரறியா சினம்


          யாவர்க்கும் சினம் கொள்ளுதல் மிக எளிதாம்! இது ஒரு பெரும் பிரச்சனையாகவும் சிலர்க்கு அது சாபமாகவும் உள்ளது.  திருக்குறளில் வெகுளாம என்றொரு முழு அதிகாரமே இருக்கிறது.

          சினம் தோன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும், எனக்கு காரணமில்லாமல் கூட சிலரை முதல் முறை கண்டால் சினம் தோன்றியிருக்கிறது. அது தவறு எனக்கும் தெரியும். அதை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்கிறேன்.

          இந்த தருணத்தில் என் மனதின் நிலையை எடுத்துரைக்கவே, இந்த செய்யுள்:

Monday, 7 November 2016

பேடியின்மை"ஒரு பரப்பத்து"

நடத்துனரிடம் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டான். கொளத்து பஸ் ஸ்டாண்டுல எடுத்த பஸ்சு, ஆனா இராமன்புதூர் வந்த பெறவு தான் டிக்கெட்டு எடுக்க முடிஞ்சது. இண்ணகு உள்ள கடைசி பஸ்ஸா இருந்தாலும், நல்ல கூட்டம். டிக்கெற்று எடுக்க இத்துர தேரம் ஆயிருகணா பாருங்க. 5D பஸ்சு எண்ணகும் இப்டி இருக்காது. இண்ணகு என்னோ நல்ல கூட்டம்.

இதை யொசித்துக் கொண்டிருக்கும்போதே டெலிபோன் பூத்துல அம்மவுடன் பேசியது ஞாபகம் வந்தது,

மோன, வெள வழியா வராத! IRE வழியா வா என்னா!. பேபட்டி கெடக்கும்.”,

சரி ஏ, நாங் வச்சுதேன் பஸ்சு இப்பம் எடுக்குவான்”,

மோன நிமலு, IRE வழியா வா செல்ல மோன”, தொலைப்பேசியை துண்டித்தான்.

இராஜாக்கமங்கலம் வந்தியாச்சு, கட எல்லம் அடச்சு கெடே! வேற பின்ன, மணி பதினொண்ணு ஆவ போறே!

கிறிஸ்துவின் பஞ்ச் வசனங்கள்


பெரியவிளை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் (நமக்கு தான் ஊரு முச்சூடும் சொந்தந்தானே, அதனால பெரியவிளை மக்கள் எல்லாரையும் பொதுவா சொந்தங்கள்ணு சொல்லலாம், தப்பில்ல!) தவக்காலத்தில், சுட்டெரிக்கும் கோடை நாளின் இரவில், தண்ணொளி வீசும் முழுநிலவின் கீழ் அமர்ந்து எழுதுகிறேன்.

திருச்சபை நமக்கு வழங்கிய ஆறு காலப்பிரிவுகளாகிய:
  1. திருவருகைக் காலம்
  2. கிறிஸ்து பிறப்பு காலம்
  3. பொதுக்காலம்-1
  4. தவக்காலம்
  5. உயிர்ப்பு காலம் (மற்றும்)
  6. பொதுக்காலம்-2


ஆகியவற்றுள் என் மனதுக்கு நெருக்கமானதாக நான் உணர்வது தவக்காலம் தான். அதற்கு காரணம் அதன் வழிபாட்டு முறைகளும், நெஞ்சையுருக்கும் பாடல்களும் தான் என நிதர்சனமாக சொல்லலாம். அதிலும் குறிப்பாக குருத்து ஞாயிறன்றும், பெரிய வெள்ளியன்றும் வாசிக்கப்படும் நற்செய்தி வாசகம் எனக்கு மிகவும் விருப்பமானது.

அந்த வாசகத்தில் இயேசு பேசும் சில வசனங்கள் பஞ்ச் வசனங்களாக (Punch Dialogues அல்லது முத்திரை வசனங்கள்) எனக்கு தோன்றுகிறது. திரு.ரஜினிகாந்தின் திரைப்படங்களை பார்த்து வளர்ந்த எனக்கு, பஞ்ச் வசனங்களை அடையாளம் கண்டுகொள்வது கடினமா என்ன?

Wednesday, 27 April 2016

விண்வெளி-2 (சார்புத்தன்மை) - இரண்டு

        அனைத்தும் சார்புடையது (Everything is Relative). பூமியில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுமே மற்றொன்றை சார்ந்து தான் நிகழ்கிறது. தன்னிச்சையாக ஏதும் இதுவரை நிகழ்ந்ததாக தெரியவில்லை. தெளிவாக சொல்லவேண்டும் என்றால், ஒவ்வொரு நிகழ்வின் மதிப்பையும், அளவையும், வீரியத்தையும் கணக்கிட அதே போன்ற வேறொரு நிகழ்வு தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, விஷத்தி வீரியத்தை அளவிட வேண்டுமானால், அதை வேறு ஒரு விஷத்தின் தன்மையை கொண்டு ஒப்பிட்ட வேண்டும். விரிவாக பார்த்தோமானால், விஷத்தின் உயிர் பறிக்கும் தன்மையை பொறுத்தே:

  • சிறு விஷம் (slow poison) 
  • நஞ்சு 
  • கொடு விஷம் (கொடிய விஷம்) என பிரிக்கலாம். 

Tuesday, 26 April 2016

விண்வெளி - 2 (சார்புத்தன்மை/Relativity)

        அன்பு மாணாக்கரே, இந்த விண்வெளி அத்யாயத்தில், சார்புத்தன்மை (Relativity) குறித்து நாம் பார்க்கவிருக்கிறோம். சார்புத்தன்மை கோட்பாடு, பிரபஞ்சம் முழுதும் பயன்படும் ஒன்றாகும்.

சார்புத்தன்மை என்றால் என்ன?

        அதைப்பற்றி தெரிந்துகொள்ள, நாம்மை சுற்றி நிகழ்பவற்றை நாம் கூர்ந்து கவனித்தால் போதுமானது. எடுத்துக்காட்டாக, குழந்தை ஒன்று ஓடி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். குழந்தைகள் ஓடுவது வேகமாகவா, மெதுவாகவா? அனைவரும் மெதுவாக என்று தான் சொல்வோம். அதுதான் இயல்பு. மெதுவாக என்று நாம் சொல்ல காரணம், குழந்தைகளின் வேகத்தை நாம் மனதில், ஓர் சராசரி மனிதன் ஓடும் வேகத்துடன் ஒப்பிட்டது தான்.

Sunday, 20 September 2015

Freedom

Many people interpret freedom from their own point of view. But, what ever angle it is looked at, most them will agree on few basic ideas about freedom. Let us discuss it here.

What is freedom?

        Some may think that freedom is allowing anyone to do what ever he or she likes. But, what about it's consequences? What will be it's effect on social life? According to me, freedom is a way of life in which, a person has all rights to do anything he wants only without interfering into other's freedom.

Saturday, 19 September 2015

விண்வெளி

        வானில் நாம் காணும் விண்மீன்கள் சிறிதாய் தோன்றினாலும், நம் பூமியை விட பல ஆயிரம் மடங்கும், மேலும் சில பல கோடி மடங்கும் பெரியன.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

        ஒருவருடைய உருவத்தை பார்த்து அவருடைய பெருமையை எடை போடக் கூடது. அதுபோல, சிறியதாய் தோன்றும் விண்மீன்கள், தங்களுக்குள் பல்வேறு அற்புதங்களையும் சிறப்புகளையும் கொண்டுள்ளன.

        மனிதன் இன்று விண்வெளியை பார்த்து அதிசயிப்பது போல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கடலை பார்த்து மனிதன் அதிசயித்தான். கடலுக்கு அப்பால் என்ன இருக்கிறது என பல நூற்றாண்டுகள் தெரியாமலேயே இருந்தான். பின்னர் கப்பல் கட்டி கடலை கடந்தான். இப்போது, செயற்கைக்கோள் மூலம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்தையும் நாம் கண்டுகொண்டோம்.

Courtesy https://www.nasa.gov

புளியுமொளவு என்பது என்ன?

        புளியுமொளவு என்பது, தென்தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் உள்ள கடற்கரை கிராமங்களிலும், கேரளத்தில் திருவநந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களிலும் (பெரும்பாலும் குமரி மாவட்டத்தில்) எதார்த்த காலை உணவாக கொள்ளப்படுவது. இந்த கிராமங்களில், மீன் தினமும் எல்லா வேளைகளிலும் உணவாக இருப்பதால், மீன் சார்ந்த பலவகையான உணவு வகைகளை இங்கு காணலாம். அவற்றுள் ஒன்று தான் புளியுமொளவு.

திருவிவிலியத்தில் அணிகள்

        விவிலியத்தை இலக்கியம் எனும் கண்களில் நோக்கினால், அதில் பல்வேறு இலக்கண சுவைகள் நிறைந்திருப்பதை காணலாம். அவேற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று அணிகள்.


அணி என்றால்?

        அணி என்பதற்கு அழகு எனும் பொருளும் உண்டு. செய்யுள்களில் அல்லது படைப்புகளில் காணப்படும் சொல் அல்லது பொருள் அழகினை எடுத்துச் சொல்வதே அணி. அணிகள் பல வகை என்றாலும், நம் விவிலியத்தில் காணப்படும் அணிகளில் மூன்றினை இப்போது காணலாம்.

Monday, 27 July 2015

வட்டார வழக்கு

        வட்டார வழக்கு குறித்து பலருக்கும் பல்வேறு கருத்துகள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலர் வட்டர வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, சிலர் அதை பெருமையாக நினைக்கிறார்கள், சிலர் அது கொச்சையானது என கருதுகிறார்கள்.

        முதலில், நம் குழந்தைகளுக்கு வட்டர வழக்கு பற்றி விளக்கும் கடமையும் நமக்கு
உள்ளது. வட்டார வழக்கு என்பது ஒருகுறிப்பிட்ட இடத்தில் ஒரு மொழி எவ்வாறு பேசப்படுகிறது, அதன் உச்சரிப்பு எப்படி இருக்கிறது என்பதை வைத்தே அமையும். எடுத்துக்காட்டாக, குமரி மாவட்டத்தில் பேசப்படுவது போல தமிழ், சேலம் மற்றும் கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் பேசப்படுவது இல்லை. சென்னையில் வேறு விதமான தமிழ் உச்சரிப்பு உள்ளது. இது போலவே மலையாளமும் திருவனந்தபுரம், கோழிக்கோடு, திருச்சூர், காசர்கோடு போன்ற பகுதிகளில் வெவ்வேறாக உச்சரிக்கப்படுகிறது. ஆங்கிலத்திலும், இந்தியிலும் உலகின் பல்வேறு மொழிகளிலும் இது போலவே பல்வேறு வட்டார வழ்க்குகள் உள்ளன.